ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி படு தோல்வி
#புனே, இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 94.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை விளையாடியது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 40.1 ஓவர்களில் 105 ரன்களில் சுருண்டது. விஜய், ராகுல், ரஹானே தவிர இந்திய அணியில் வேறு யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை. கடைசி 7 விக்கெட்டுகளை இந்திய அணி வெறும் 11 ரன்களில் பறிகொடுத்தது. பின்னர் 155 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 2–வது நாள் ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்து இருந்தது. இதையடுத்து இன்றைய 3-வது நாள் ஆட்டம் துவங்கியதில் இருந்து அசத்தலாக ஆடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் சதம் அடித்தார். அவருக்கு பக்கபலமாக மறுமுனையில் வந்த வீரர்களும் கணிசமான ரன்களை சேர்த்து சீரான இடைவெளியில...