Posts

Showing posts from February 19, 2017

China Official Trailer | Kalaiyarasan, Ritu Varma | Harshavardhana | Ved Shanker

Image
'##China’ is a gangster horror/thriller extensively shot in real locations at Burma Bazaar and Sowcarpet. Kalaiyarasan Harikrishnan plays the lead protagonist and Ritu Varma is the heroine. Yog Japee and Daniel Annie Pope also have enacted important roles in the movie. It marks the directorial debut of former Murugadoss associate S.Harshavardhana. With Ved Shankar Sugavanam’s music adding soul to Abinandhan Ramanujam’s visuals and G K Prasanna’s cuts 'China’ promises to be an audiovisual treat. Mumbai based Arkash Media Works helmed by Arjun Sablok have produced this feature film. Writer and Director : S Harshavardhana Cinematographer : Abinandhan Ramanujan Music : Ved Shanker Sugavanam Editor : Prasanna G K Sound Design : Nixon George & Rajeesh K Ramanan (Cellador Productions) Art : Martin Jose Poster Design: Sharath Stunt : Billa Jagan Make up : Vinoth Sukumaran Costume : K Selvam Production executive : Sampath D.I : B2H studios Line Producer : Moksha Films Producer : A...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி படு தோல்வி

Image
#புனே, இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி  முதல் இன்னிங்சில்  94.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை விளையாடியது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 40.1 ஓவர்களில் 105 ரன்களில் சுருண்டது. விஜய், ராகுல், ரஹானே தவிர இந்திய அணியில் வேறு யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை. கடைசி 7 விக்கெட்டுகளை இந்திய அணி வெறும் 11 ரன்களில் பறிகொடுத்தது. பின்னர் 155 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி  2–வது நாள் ஆட்ட நேர இறுதியில்  4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்து இருந்தது.  இதையடுத்து இன்றைய 3-வது நாள் ஆட்டம் துவங்கியதில் இருந்து அசத்தலாக ஆடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித்  சதம் அடித்தார். அவருக்கு பக்கபலமாக மறுமுனையில் வந்த வீரர்களும் கணிசமான ரன்களை சேர்த்து சீரான இடைவெளியில...

உலகின் பணக்கார சாமியார் ஜக்கி : பொறுமையா படிங்க

Image
#மைசூரில் பிறந்து, வளர்ந்து  தமிழ்நாட்டுக்கு சேவை செய்ய, கோவையில் 1989-ம் ஆண்டு, தனது காலடியை  வைத்தார். பசி, பட்டினி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, லஞ்சம், பொறாமை,  கோபம் போன்றவற்றை தனது யோகா என்ற ஒரே ஆயுதத்தால் முடிவுக்கு கொண்டு வர, தமிழ் மக்களை எல்லாம் “ஆனந்த அலையில்” சிக்கவைக்க,  “வாருங்கள் உங்களில் மலருங்கள்” என்று அன்போடு அழைக்கும் சத்குரு என்று தனக்கு தானே பெயர் சூட்டி கொண்ட ஜக்கி வாசுதேவ் அவர்களின் சுருக்கமான கிரிமினல் வரலாறு இதுவாகும். ரூ.14 கோடி மதிப்புள்ள R 22 ரக ஹெலிகாப்டர், ரூ.40 இலட்சம் விலையுள்ள ஹம்மர் கார், பல லட்ச ரூபாய்  மதிப்புள்ள BMW மற்றும் Honda மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில், ஜீன்ஸ் பேண்ட் + கருப்பு கண்ணாடியுடன் வலம்வரும் நவீன சாமியார் தான் ஜக்கி. பக்தர்களிடம் “எல்லாவற்றுக்கும் ஆசைப்படு” என்ற கார்ப்பரேட் உலகிற்கு இசைவான, இச்சையைத் தூண்டும் சாமியார். கடவுள் நம்பிக்கை இல்லாதவராக பேசிக்கொண்டே, இந்துத்துவா’விற்கு இசைவான சமயப் பணிகளை மேற்கொள்பவர். 1999ல், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில்  தியான’லிங்கம்’ அமைத்தவர்;சத்சங்கங்கள் என்ற பெயரில் கூட்ட...

வாட்ஸ் அப்பில் அதிரடி மாற்றம்

Image
#தற்போது ஸ்மார்ட்போன் கையில் இல்லாதவர்களை கண்டுபிடிப்பதே சிரமம். உலகில் 80 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர் என்கின்றன ஆய்வுகள். ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ் அப், லைன், வீ சேட், வைபர், பேஸ்புக் மெசஞ்சர் ஆகியவை, அனைவரையும் அதிலேயே ஆழ்ந்துபோகச் செய்கின்றன. பல்வேறு வசதிகளை வாரி வழங்கும் ஸ்மார்ட்போன்களால் ஆபத்துகளும் அதிகம் என்பதே உண்மை. ஆம், ஸ்மார்ட்போனில் மூழ்கி உயிரை விட்டவர்கள் உலகளவில் அதிகம். அதிலும் குறிப்பாக, வாட்ஸ்ஆப் உபயோகிப்பது பலருக்கும் சாப்பிடுவது, உறங்குவதைப் போல முக்கிய கடமைகளில் ஒன்றாக மாறிவருகிறது. இந்தியாவில் வாட்ஸ்ஆப் சேவைக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது. இதன்படி, தற்போது வாட்ஸ்ஆப் உபயோகிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 20 கோடியாக அதிகரித்துள்ளது. இதனை, வாட்ஸ்ஆப் நிறுவனர்களில் ஒருவரான பிரையான் ஆக்டன் அதிகாரப்பூர்வமாகக் கூறியுள்ளார். டெல்லி ஐஐடி கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோதே, இத்தகவலை பிரையான் வெளியிட்டார். மேலும், தினசரி புதுப்புது அப்டேட் வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலமாக, அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முடிவதாகவும், இந...

ஜிவி பிரகாஷ்-இன் "4 ஜி" பர்ஸ்ட் லுக் வெளியீடு

Image
#இயக்குனர் வெங்கட் பாக்கர் இயக்கத்தில், ஜி.வி பிரகாஷ்குமார், சதிஷ் நடித்திருக்கும் 4ஜி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. திரையுலகில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம்வரும் ஜி.வி பிரகாஷ், வெங்கட் பாக்கர் இயக்கத்தில், 4ஜி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சி.வி குமார் தயாரிக்கிறார். 4 ஜி படம் நான்காம் தலைமுறையின் காதலை சொல்லும் படமாக உருவாகிறது. 4 ஜி படத்தில் மலையாள நடிகை காயத்ரி சுரேஷ் ஜிவிக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையும் அமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜிவி அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 4ஜி திரைப்படம் நகைச்சுவை அதிரடி திரைப்படமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: டிடிவி தினகரன்

Image
         #மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: டிடிவி தினகரன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை “கொலைக் குற்றவாளியான ஜெயலலிதா” என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி ஸ்டாலின் கூறியதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதற்காக ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், 24.2.2017 அன்று(நேற்று) பத்திரிகையாளிர்களிடம் பேசிய போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசும்போது “கொலைக் குற்றவாளியான ஜெயலலிதா” என்ற வார்த்தையை ஸ்டாலின் பயன்படுத்தினார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்காக மு.க.ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தினகரன் வலியுறுத்தியுள்ளார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, வாழப்பாடி பழனிசாமி என்றும், காவேரி மேலாண்மை வாரியத்தை காவேரி நடுவர் மன்றம் என பொது இடங்களில் மு.க.ஸ்டாலின் கூறுவதாக தெரிவித்துள்ள டிடிவி தினகரன் இனியும் துண்டுச் சீட்டு துணையின்றி மு.க.ஸ்டாலின் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்-ஓ.பன்னீர்செல்வம்

Image
சென்னை இன்று தனியார் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:- செயற்கையாக ஒரு அரசியல் சூழல் ஏற்படுத்தபட்டு உள்ளது. கட்சியிலும் ஆட்சியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளது.மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் எண்ணத்திற்கு மாற்றாக ஒரு ஆட்சியிலும் கட்சியிலும் மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளது.  உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கபட்டவுடன் நீதிகேட்கும் பயணம் தொடங்கும். மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தி வருகின்ற தேர்தலில் வெளிப்படும். யாருடைய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் முதல்வர் இயங்குகிறார் என்பது இங்கு அனைவருக்கும் தெரியும்.  சொகுசு விடுதியில் இருந்த போது என்னிடம் பல எம்.எல் ஏக்கள் எனக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்கள். ஆனால் அவர்களை வெளியே விடாமல் அப்படியே அழைத்து வந்து நம்பிகை தீர்மானத்தில் கலந்து கொள்ள வைத்து உள்ளார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் முதலவராக பொறுப்பு ஏற்றவுடன் அமைச்சர்கள் மூலம்,  தலைமை கழக நிர்வாகிகள், பாராளுமன்ற துணை சபாநாயகர் ஆகியோர் மூலம் எனக்கு கடுமையான இடையூறு கொடுத்தார்கள். நானாக பதவி விலக  வேண்டுமென அவர்கள் எண்ணினார்கள். 'ஜல்லிக்கட்டு போ...

மணிப்பயல்களை தமிழ்ப்பயல்கள் தேடிச்சென்று தாக்கு : கமல் உச்சகட்ட ஆத்திரம்

Image
#தன்னை எதிர்ப்பவர்களை விமர்சிக்கும் சுப்பிரமணியன் சுவாமி, பயன்படுத்தும் வார்த்தைகள் மிகவும் நாகரீகமற்றதாக இருப்பதை கண்டுகொள்வதே இல்லை. பொறுக்கி, எலி, நக்சல், தேச விரோதி, முட்டாள், முதுகெலும்பில்லாதவன், படிப்பறிவு இல்லாதவன் என வெறுக்கத்தக்க வார்த்தைகளை உபயோகிக்கிறார். குறிப்பாக கமலை மிக அருவெறுக்க தக்க வகையில் வசைபாடுகிறார். நேற்றைய டுவிட்டர் பதிவில் சாக்கடையில் ஊறி கிடக்கும் விலங்குகள் சில சமயம் ஒப்பனையும் இட்டு வேஷம் கட்டும் என்று கூறவும் கமல் கொதித்துவிட்டார். உடனடியாக தனது டுவிட்டரில் மணிப்பயல்களை தமிழ்பயல்கள் தேடிச்சென்று தாக்கு. கேட்பதற்கு நாதியற்றோர் நாதியின்றி மரணிப்பர் என்றார். இது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. இனி நீ  தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறோம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

பொங்கியது 20 கிராமம் ; ஐ.டி., இளைஞர்கள் நாளை உண்ணாவிரதம், நெடுவாசலின் உச்சகட்டம்!

Image
நாடுமுழுவதும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பல இடங்களை தேர்வுசெய்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் நெடுவாசல் உள்ளிட்ட சுமார் 15 இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், புதுகை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தவுள்ள மத்திய அரசை கண்டித்து சுற்றுவட்டார மக்கள் கடந்த ஒரு சில நாட்களாகவே போராட்டக்குரல் கொடுத்து வருகின்றனர். இவர்களோடு சென்னை ஐ.டி. ஊழியர்களும் போராட்டம் செய்துவந்தனர். மேலும், தமிழ்நாடு இளைஞர் கட்சி நாளை மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டம் மேலும் சென்னை உள்ளிட்ட ஐ.டி., நிறுவனங்களைச் சேர்ந்த இளைஞர்களும் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில், நெடுவாசல், புள்ளான் விடுதி கள்ளிக்கொல்லை, வாணக்கன்காடு, கருக்காக்குறிச்சி, கோட்டைக்காடு உள்ளிட்ட 20 கிராமத்திற்கு மேற்பட்ட மக்களும், இளைஞர்களும், மாணவர்களும் ஒன்றுதிரண்டு நாளைய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.டி. ஊழியர்களோடு கைகோர்க்கின்றனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக நேற்று ஐடி., இளைஞர்கள் ஆலோசனையில் ஈடுபட்டதா...

ஜெ. சிகிச்சை குறித்து கருத்து தெரிவித்த டாக்டர். சீதா கைது

Image
#சென்னை: ஜெயலலிதா சிகிச்சை குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் சீதா என்பவர் கைது செய்யப்பட்டார். ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபோது, அங்கு டாக்டராக பணியாற்றியவர் சீதா. ஜெயலலிதா மறைவையடுத்து, சில சர்ச்சையான கருத்துக்களை அவர் கூறியிருந்தார். இதுகுறித்து அப்பல்லோ நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார், சீதாவை இன்று கைது செய்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஆகிறார் பொதுக்குழு உறுப்பினர்களை திரட்டுகின்றனர்

Image
சென்னை,  ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. பிளவு பட்டது. ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியினர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.  இந்த அணியில் அவைத் தலைவர் மதுசூதனன், பொன்னையன், கே.பி.முனு சாமி, பி.எச்.பாண்டியன், நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் 10 எம்.எல்.ஏ.க்களும் 11 எம்.பி.க்களும் இருக்கிறார்கள்.  அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது. விரைவில் பொதுக்குழுவை கூட்டி புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யப் படுவார் என்று ஏற்கனவே மதுசூதனன் அறிவித்து இருந்தார்.  இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா ஜெயிலுக்கு சென்றார். அவர் ஜெயிலுக்கு செல்வதற்கு முன்பு டி.டி.வி.தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமித்தார். தற்போது கட்சி பணிகளை தினகரன் கவனிக்கிறார். தினகரன் தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.  அடுத்த கட்டமாக பொதுக் குழுவை கூட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இதற்காக மாவட்டம் தோறும் பொதுக் குழு உறுப்பினர்களையும், தொண்டர்களையும் திரட்டி வருகிறார்கள்...

Actor karunas press meet at kodampakkam

Image

Foreigner Vijay Fan - Massss! :)

Image
          

Saahore Baahubali - Special Interview of Prabhas and SS Rajamouli

Image
#Watch the interview of Prabhas and SS Rajamouli on the special occasion of Maha Shivaratri  Baahubali is a two part Indian movie that is simultaneously being shot in Telugu and Tamil. The film will also be dubbed in Hindi, Malayalam and in several other foreign languages.         

'இண்டர்நெட் பேங்கிங்' பயன்படுத்தும் முன் இதைப் படிங்க..!

Image
இணைய வழியான பண பரிமாற்றம் மற்றும் வங்கி சேவையில் தினமும் நடக்கும் மோசடிகளில் தப்பிக்க நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியவை. இன்றைய இண்டர்நெட் உலகில் கிட்டத்தட்ட அனைத்துப் பணிகளையும் நாம் ஆன்லைனிலேயே முடித்துவிடுகிறோம். முன்பெல்லாம் வங்கியில் ஒருவருக்குப் பணம் அனுப்ப வேண்டுமானால் செலானை பூர்த்திச் செய்து மணிக்கணக்கில் வரிசையில் நின்று பணத்தைச் செலுத்த வேண்டும். ஆனால் இப்போது வங்கிக்கு அக்கவுண்ட் ஓப்பன் செய்யும்போது மட்டும் போனால் போதும். மற்ற எல்லா வேலைகளையும் ஆன்லைனிலேயே முடித்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்யும்போது தகுந்த பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். இல்லையெனில் நாம் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தைக் கஷ்டமேபடாமல் ஹேக்கர்கள் அள்ளிக் கொண்டு சென்றுவிடுவார்கள். எனவே ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போது செய்ய வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் குறித்துப் பார்ப்போம் ஸ்ட்ராங்கான பாஸ்வேர்டு முக்கியம் ஆன்லைன் பரிவர்த்தனையின் போது நாம் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை ஸ்ட்ராங்கான பாஸ்வேர்டை நாம் செலக்ட் செய்வதுதான். குறிப்பாக நீங்கள் தேர்வு செய்யும் பாஸ்வேர்டு உங்கள்...

நாகர்கோவிலில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது

Image
#நாகர்கோவிலில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு திடீர் விபத்திற்குள்ளானது. கன்னியாகுமரி கன்னியாகுமரியில் இருந்து ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள யார்டுக்கு கொண்டு வந்து, பராமரிப்பு பணிகள் நடந்தது. பிறகு ரெயிலை 5–வது பிளாட்பாரத்தில் நிறுத்துவதற்காக கன்னியாகுமரி செல்லும் தண்டவாளத்தில் இரவு 8.30 மணிக்கு கொண்டு சென்றனர். அந்த ரெயில் யார்டில் இருந்து சிறிது தூரம் சென்றபோது எதிர்பாராதவிதமாக என்ஜின் பகுதியில் இருந்து 4 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு விலகி கீழே இறங்கி நின்றன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தினார். பின்னர் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு தடம் புரண்ட பெட்டிகளை சரிசெய்யும் பணியை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெண்கள் வீட்டிலேயே இருந்தபடி லட்சங்களைச் சம்பாதிக்கலாம்..!

Image
##கொஞ்சம் முயற்சி செய்தால் போதும் உங்கள் வீட்டு செலவுகளுக்கு தேவையான தொகை சில நாட்களில் சம்பாதித்து விட முடியும். இன்றளவில் பெண்கள் பெரும்பாலானோர் குறைந்தபட்சம் கல்லூரி படிப்பை முடித்துவிடுகின்றனர். படிப்புக்குப் பின் வேலை எனப் பல லட்சக்கணக்கான பெண்கள் ஆண் மகனுக்கு இணையாக உள்ளனர் என்றால் மிகையாகாது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக இந்த 20ஆம் நூற்றாண்டிலும் பெண்கள் தங்களது திருமணத்திற்குப் பின் பல பெண்கள் வீட்டிலேயே முடங்கிப் போய்விடுகின்றனர். இதனால் அவர்களது வருமானமும் சரி, திறமைகளும் சரி மறைந்து போகிறது. இத்தகைய சூழ்நிலையில் பெண்கள் வீட்டிலேயே இருந்தபடி தினமும் சில ஆயிரங்கள் முதல் மாதத்திற்கு லட்சங்கள் சம்பாதிக்கும் அளவிற்கு வாய்ப்புகள் உள்ளது. இதைப்பற்றியே இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்.          READ FIRST......   small business for women, small business grants for women and business ideas for women, small business idea, small home business If you want to start your own small business, first you have to match your curren...

கொதித்த ஆச்சார்யா.!! நீ சொகுசா இருப்பதற்க்கு ஒன்னும் நாங்க தண்டனை வாங்கி தரல !!

Image

தினகரனை வீழ்த்த தீபக்! நடராசனை வீழ்த்த ஜெயக்குமார்!

Image
#எ ப்போதும் சீனுக்கு வராத ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார். ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு முந்தைய நாளில் அவர் இந்த வெடியைப் பற்ற வைத்திருக்கிறார்.  "டி.டி.வி. தினகரனை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக ஏற்க முடியாது. ஓ.பி.எஸ் மீண்டும் தாய்க் கழகத்துக்கே திரும்ப வேண்டும்." என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். ''தீபாவை ஏற்க முடியாது, கட்சி உடையக் கூடாது, போயஸ்கார்டனுக்கு நானும்  தீபாவும்தான் உரிமை கொண்டாட முடியும்.'' என்றும் அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கிறார் தீபக். மாலைப்பொழுதில் தீபக்  இப்படி  பேட்டி அளிப்பதற்கு முன்னால், அன்றைய தினம் காலைப் பொழுதில் என்ன நடந்தது? தீபக் பேட்டி அளித்த பின் அதற்கு எதிர்வினையாக அ.தி.மு.க-வில் நடந்தது என்ன?  அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் பெயர்  அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியிருந்தாலும், பிப்ரவரி 23-ம் தேதிதான்  கட்சி அலுவலகத்துக்கு  வந்து பதவியேற்றுக் கொண்டார்  தினகரன்.   தினகரனின் பதவியேற்பு நிகழ்ச்சி மிகவும் அமைதியாக நடந்தும...

ட்ரம்பை வீழ்த்தி உள்ளே நுழைந்தான் முதல் தமிழன்!அமெரிக்காவிலும் கலக்குறான் நம்மாளு.!

Image
#பராக் #ஒபாமாவின் தொகுதியான இல்லினாய்ஸ் மாகாணத்தில் வெற்றிபெற்று  அசத்தியிருக்கிறார் ராஜா கிருஷ்ணமூர்த்தி. இவர், ராஜபாளையத் தமிழர்; ஒபாமாவின் நண்பர். அமெரிக்க காங்கிரஸில் பதவி ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், தன் சொந்த ஊரான ராஜபாளையத்துக்கு வந்திருந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: என் அப்பா ராஜபாளையம். அம்மா தஞ்சாவூர். மனைவியும் தமிழ்நாடுதான். அப்பா சுப்பிரமணியம் டெல்லியில் வேலை பார்த்தவர். அமெரிக்காவில்  வெற்றிபெறுவோம் என்ற பெரிய நம்பிக்கை இருந்தது. இனவாதம் பேசியும் வெளிநாட்டு மக்களையும் வேற்று மதங்களையும் ஏடாகூட விமர்சனங்களும் செய்தார் ட்ரம்ப். இந்த விஷயங்கள் ஹில்லரிக்குச் சாதகமாக இருந்தன. ஆனால், இவை அவரது வெற்றிக்குப் போதுமானதாக இல்லை. ட்ரம்ப் உளறினாலும் அவரைத் தைரியமான தலைவராக மக்கள் பார்த்தார்கள். தொழிலாளர்களுக்கு உதவுவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், இப்போது அவர் பேசிய பேச்சுகளில் இருந்து பல்டி அடிக்கிறார். ட்ரம்ப், இந்திய அமெரிக்கர்களிடம் நல்ல மதிப்பு கொண்டிருக்கிறார். இந்திய அமெரிக்க வர்த்தகம் வளர உதவுவதாகவும் வாக்குறுதி கொடுத்திருக் கிறார். அவர் பேசிய ...

எரிவாயு எடுக்கும் திட்டம்: களமிறங்கிய ஐ.டி ஊழியர்கள்!

Image
#புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். நிலத்தில் 6000 அடிக்கு கீழ் போர்வெல் மூலம் நிலக்கரிகளுக்கு அடியில் உள்ள ஹைட்ரோ கார்பன் எனும் எரிவாயுவை எடுப்பதால் விவசாய நிலங்கள் ரசாயனத்தால் பாதிக்கப்பட்டு வறட்சி ஏற்பட்டு பாலைவனமாக மாறிவிடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர். ஏற்கனவே, தஞ்சை பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு தமிழக விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்பை அடுத்து மீத்தேன் திட்டத்தில் இருந்து அரசு பின்வாங்கியது. இந்த சூழலில், ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிபொருள் எடுக்க நாடு முழுவதும் பட்டியலிடப்பட்டுள்ள 31 இடங்களில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து போராட்டத்தை ந...

நாளை ஜெ உயில் வெளியாகிறது! மோடி அதிரடியால் வாய்பிளக்குது சசி கூட்டம்! அச்சாரம்தான் தீபக் பேட்டி!

Image
அதிமுக பொதுச் செயலாளா் ஜெயலலிதாவிற்கு தன் உடன் இருக்கும் சசிகலா மற்றும் அவரது உறவினா்களை பற்றி நன்கு அறிந்து இருந்தார். அதனால்தான், ஜெயலலிதா கடந்த பல வருடங்களுக்கு முன்னரே உயில் எழுதி வைத்துவிட்டார். அந்த உயில்  பத்திரிக்கையாளா் சோ.ராமசாமியிடம் இருந்தது. அவா் உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த உயில் ஆடிட்டா் குருமூர்த்தியிடம் கொடுக்கப்பட்டது. அவரும் சசியின் கூட்டத்தின் ஆட்டத்திற்கு பயந்து பிரதமா் மோடியிடம் ஒப்படைத்ததாகக்கூறப்படுகிறது. ஜெயலலிதா பிறந்தநாளான நாளை மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சிலா் அந்த உயிலை பத்திரிக்கையாளா்கள் முன்னிலையில் டெல்லியில் வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படி உயில் வெளியே வரும் பட்சத்தில் போயஸ் கார்டன், கொடாநாடு எஸ்டேட் உள்ளிட்ட ஜெயலலிதாவின் பல சொத்துக்கள், அவரது அண்ணன் மகன்தீபக், மற்றும் தீபாவிடம் வந்து சேர உள்ளது. அண்ணா திமுகவினரின் புனிதஸ்தலமாக பார்க்கப்படும் இடம் போயஸ் கார்டன். அந்த புனிதஸ்தலம் தீபா மற்றும் தீபக்கிற்கு கைமாறும்போது அதில் இருந்து சசி மற்றும் அவரது குடும்பத்தினா் தாங்களாகவே வெளியேறுவார்கள்....