நாகர்கோவிலில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது
#நாகர்கோவிலில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு திடீர் விபத்திற்குள்ளானது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் இருந்து ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள யார்டுக்கு கொண்டு வந்து, பராமரிப்பு பணிகள் நடந்தது. பிறகு ரெயிலை 5–வது பிளாட்பாரத்தில் நிறுத்துவதற்காக கன்னியாகுமரி செல்லும் தண்டவாளத்தில் இரவு 8.30 மணிக்கு கொண்டு சென்றனர்.
அந்த ரெயில் யார்டில் இருந்து சிறிது தூரம் சென்றபோது எதிர்பாராதவிதமாக என்ஜின் பகுதியில் இருந்து 4 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு விலகி கீழே இறங்கி நின்றன.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தினார். பின்னர் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு தடம் புரண்ட பெட்டிகளை சரிசெய்யும் பணியை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comments
Post a Comment