Posts

Showing posts with the label Tamil

இன்றைய சூழலில் விஜய் அரசியலுக்கு வருவாரா- எஸ். ஏ. சந்திரசேகர் பரபரப்பு பேட்டி

Image
#Vijay #S.A.Chandrasekar நடிகர்கள் அரசியலுக்கு சாதாரணமாக வரமுடியும் என்பது மக்கள் கருத்து. அப்படி பல கோடி மக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் அவரோ அந்த பேச்சுக்கே இடமில்லை என்கிறார். இன்னொரு பக்கம் இளையதளபதி விஜய் அரசியலில் நுழைய வேண்டும் என்று பலர் கூறுகின்றனர். இந்நிலையில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு பேட்டியில், ஒரு நடிகராக இருந்தால் எளிதாக அரசியலுக்கு வரமுடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் இப்போது அரசியல் வியாபாரமாக மாறிவிட்டது. கடந்த 10 ஆண்டுக்கு முன்பு விஜயை அரசியலுக்கு கொண்டு வர முயற்சி செய்தேன். ஆனால் தற்போது உள்ள வியாபார அரசியல் சூழ்நிலையில் அவரை அரசியலுக்கு கொண்டு வர வேண்டாம் என முடிவு செய்துள்ளோம் என்றார்.

Top 10 vada poche show reel by sunmusic

Image

Actor Vijay Triple Roles and Looks Explained | Be Ready To Be Shocked | Vijay 61 Latest Update KspoTStudioS

Image

Meesaya Murukku Adhi,Vivek,Hiphop Tamizha and Avni Movies

Image

Thalapathy-62 Will make 21 year old director? | vijay 62 movie chance for |Karthick Naren.

Image

ஜிவி பிரகாஷ்-இன் "4 ஜி" பர்ஸ்ட் லுக் வெளியீடு

Image
#இயக்குனர் வெங்கட் பாக்கர் இயக்கத்தில், ஜி.வி பிரகாஷ்குமார், சதிஷ் நடித்திருக்கும் 4ஜி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. திரையுலகில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம்வரும் ஜி.வி பிரகாஷ், வெங்கட் பாக்கர் இயக்கத்தில், 4ஜி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சி.வி குமார் தயாரிக்கிறார். 4 ஜி படம் நான்காம் தலைமுறையின் காதலை சொல்லும் படமாக உருவாகிறது. 4 ஜி படத்தில் மலையாள நடிகை காயத்ரி சுரேஷ் ஜிவிக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையும் அமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜிவி அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 4ஜி திரைப்படம் நகைச்சுவை அதிரடி திரைப்படமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: டிடிவி தினகரன்

Image
         #மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: டிடிவி தினகரன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை “கொலைக் குற்றவாளியான ஜெயலலிதா” என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி ஸ்டாலின் கூறியதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதற்காக ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், 24.2.2017 அன்று(நேற்று) பத்திரிகையாளிர்களிடம் பேசிய போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசும்போது “கொலைக் குற்றவாளியான ஜெயலலிதா” என்ற வார்த்தையை ஸ்டாலின் பயன்படுத்தினார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்காக மு.க.ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தினகரன் வலியுறுத்தியுள்ளார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, வாழப்பாடி பழனிசாமி என்றும், காவேரி மேலாண்மை வாரியத்தை காவேரி நடுவர் மன்றம் என பொது இடங்களில் மு.க.ஸ்டாலின் கூறுவதாக தெரிவித்துள்ள டிடிவி தினகரன் இனியும் துண்டுச் சீட்டு துணையின்றி மு.க.ஸ்டாலின் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்-ஓ.பன்னீர்செல்வம்

Image
சென்னை இன்று தனியார் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:- செயற்கையாக ஒரு அரசியல் சூழல் ஏற்படுத்தபட்டு உள்ளது. கட்சியிலும் ஆட்சியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளது.மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் எண்ணத்திற்கு மாற்றாக ஒரு ஆட்சியிலும் கட்சியிலும் மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளது.  உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கபட்டவுடன் நீதிகேட்கும் பயணம் தொடங்கும். மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தி வருகின்ற தேர்தலில் வெளிப்படும். யாருடைய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் முதல்வர் இயங்குகிறார் என்பது இங்கு அனைவருக்கும் தெரியும்.  சொகுசு விடுதியில் இருந்த போது என்னிடம் பல எம்.எல் ஏக்கள் எனக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்கள். ஆனால் அவர்களை வெளியே விடாமல் அப்படியே அழைத்து வந்து நம்பிகை தீர்மானத்தில் கலந்து கொள்ள வைத்து உள்ளார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் முதலவராக பொறுப்பு ஏற்றவுடன் அமைச்சர்கள் மூலம்,  தலைமை கழக நிர்வாகிகள், பாராளுமன்ற துணை சபாநாயகர் ஆகியோர் மூலம் எனக்கு கடுமையான இடையூறு கொடுத்தார்கள். நானாக பதவி விலக  வேண்டுமென அவர்கள் எண்ணினார்கள். 'ஜல்லிக்கட்டு போ...

பொங்கியது 20 கிராமம் ; ஐ.டி., இளைஞர்கள் நாளை உண்ணாவிரதம், நெடுவாசலின் உச்சகட்டம்!

Image
நாடுமுழுவதும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பல இடங்களை தேர்வுசெய்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் நெடுவாசல் உள்ளிட்ட சுமார் 15 இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், புதுகை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தவுள்ள மத்திய அரசை கண்டித்து சுற்றுவட்டார மக்கள் கடந்த ஒரு சில நாட்களாகவே போராட்டக்குரல் கொடுத்து வருகின்றனர். இவர்களோடு சென்னை ஐ.டி. ஊழியர்களும் போராட்டம் செய்துவந்தனர். மேலும், தமிழ்நாடு இளைஞர் கட்சி நாளை மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டம் மேலும் சென்னை உள்ளிட்ட ஐ.டி., நிறுவனங்களைச் சேர்ந்த இளைஞர்களும் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில், நெடுவாசல், புள்ளான் விடுதி கள்ளிக்கொல்லை, வாணக்கன்காடு, கருக்காக்குறிச்சி, கோட்டைக்காடு உள்ளிட்ட 20 கிராமத்திற்கு மேற்பட்ட மக்களும், இளைஞர்களும், மாணவர்களும் ஒன்றுதிரண்டு நாளைய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.டி. ஊழியர்களோடு கைகோர்க்கின்றனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக நேற்று ஐடி., இளைஞர்கள் ஆலோசனையில் ஈடுபட்டதா...