'இண்டர்நெட் பேங்கிங்' பயன்படுத்தும் முன் இதைப் படிங்க..!

இணைய வழியான பண பரிமாற்றம் மற்றும் வங்கி சேவையில் தினமும் நடக்கும் மோசடிகளில் தப்பிக்க நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியவை.



இன்றைய இண்டர்நெட் உலகில் கிட்டத்தட்ட அனைத்துப் பணிகளையும் நாம் ஆன்லைனிலேயே முடித்துவிடுகிறோம். முன்பெல்லாம் வங்கியில் ஒருவருக்குப் பணம் அனுப்ப வேண்டுமானால் செலானை பூர்த்திச் செய்து மணிக்கணக்கில் வரிசையில் நின்று பணத்தைச் செலுத்த வேண்டும். ஆனால் இப்போது வங்கிக்கு அக்கவுண்ட் ஓப்பன் செய்யும்போது மட்டும் போனால் போதும். மற்ற எல்லா வேலைகளையும் ஆன்லைனிலேயே முடித்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்யும்போது தகுந்த பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். இல்லையெனில் நாம் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தைக் கஷ்டமேபடாமல் ஹேக்கர்கள் அள்ளிக் கொண்டு சென்றுவிடுவார்கள். எனவே ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போது செய்ய வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் குறித்துப் பார்ப்போம் ஸ்ட்ராங்கான பாஸ்வேர்டு முக்கியம் ஆன்லைன் பரிவர்த்தனையின் போது நாம் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை ஸ்ட்ராங்கான பாஸ்வேர்டை நாம் செலக்ட் செய்வதுதான். குறிப்பாக நீங்கள் தேர்வு செய்யும் பாஸ்வேர்டு உங்கள் பிறந்த நாள், திருமண நாள், போன்ற தேதிகள் நிச்சயம் இருக்கக்கூடாது. அதே நேரத்தில் பாஸ்வேர்ட் லோயர் மற்றும் அப்பர் எழுத்துகளிலும் எண்கள் மற்றும் ஒருசில சிம்பல்கள் கலந்து இருப்பதும் முக்கியம். இதுபோன்ற சிக்கலான பாஸ்வேர்டை ஞாபகம் வைத்துக் கொள்வது கடினம்தான். இதுபோன்ற நேரங்களில் நீங்கள் "Elephant" என்ற பாஸ்வேர்டை செலக்ட் செய்வதற்குப் பதிலாக "Eleph@nt" என்று பயன்படுத்தினால் அது பாதுகாப்பானதாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

Baahubali 2 - The Conclusion Trailer | Prabhas, Rana Daggubati | SS Rajamouli Baahubali Movie