Posts

China Official Trailer | Kalaiyarasan, Ritu Varma | Harshavardhana | Ved Shanker

Image
'##China’ is a gangster horror/thriller extensively shot in real locations at Burma Bazaar and Sowcarpet. Kalaiyarasan Harikrishnan plays the lead protagonist and Ritu Varma is the heroine. Yog Japee and Daniel Annie Pope also have enacted important roles in the movie. It marks the directorial debut of former Murugadoss associate S.Harshavardhana. With Ved Shankar Sugavanam’s music adding soul to Abinandhan Ramanujam’s visuals and G K Prasanna’s cuts 'China’ promises to be an audiovisual treat. Mumbai based Arkash Media Works helmed by Arjun Sablok have produced this feature film. Writer and Director : S Harshavardhana Cinematographer : Abinandhan Ramanujan Music : Ved Shanker Sugavanam Editor : Prasanna G K Sound Design : Nixon George & Rajeesh K Ramanan (Cellador Productions) Art : Martin Jose Poster Design: Sharath Stunt : Billa Jagan Make up : Vinoth Sukumaran Costume : K Selvam Production executive : Sampath D.I : B2H studios Line Producer : Moksha Films Producer : A...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி படு தோல்வி

Image
#புனே, இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி  முதல் இன்னிங்சில்  94.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை விளையாடியது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 40.1 ஓவர்களில் 105 ரன்களில் சுருண்டது. விஜய், ராகுல், ரஹானே தவிர இந்திய அணியில் வேறு யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை. கடைசி 7 விக்கெட்டுகளை இந்திய அணி வெறும் 11 ரன்களில் பறிகொடுத்தது. பின்னர் 155 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி  2–வது நாள் ஆட்ட நேர இறுதியில்  4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்து இருந்தது.  இதையடுத்து இன்றைய 3-வது நாள் ஆட்டம் துவங்கியதில் இருந்து அசத்தலாக ஆடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித்  சதம் அடித்தார். அவருக்கு பக்கபலமாக மறுமுனையில் வந்த வீரர்களும் கணிசமான ரன்களை சேர்த்து சீரான இடைவெளியில...

உலகின் பணக்கார சாமியார் ஜக்கி : பொறுமையா படிங்க

Image
#மைசூரில் பிறந்து, வளர்ந்து  தமிழ்நாட்டுக்கு சேவை செய்ய, கோவையில் 1989-ம் ஆண்டு, தனது காலடியை  வைத்தார். பசி, பட்டினி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, லஞ்சம், பொறாமை,  கோபம் போன்றவற்றை தனது யோகா என்ற ஒரே ஆயுதத்தால் முடிவுக்கு கொண்டு வர, தமிழ் மக்களை எல்லாம் “ஆனந்த அலையில்” சிக்கவைக்க,  “வாருங்கள் உங்களில் மலருங்கள்” என்று அன்போடு அழைக்கும் சத்குரு என்று தனக்கு தானே பெயர் சூட்டி கொண்ட ஜக்கி வாசுதேவ் அவர்களின் சுருக்கமான கிரிமினல் வரலாறு இதுவாகும். ரூ.14 கோடி மதிப்புள்ள R 22 ரக ஹெலிகாப்டர், ரூ.40 இலட்சம் விலையுள்ள ஹம்மர் கார், பல லட்ச ரூபாய்  மதிப்புள்ள BMW மற்றும் Honda மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில், ஜீன்ஸ் பேண்ட் + கருப்பு கண்ணாடியுடன் வலம்வரும் நவீன சாமியார் தான் ஜக்கி. பக்தர்களிடம் “எல்லாவற்றுக்கும் ஆசைப்படு” என்ற கார்ப்பரேட் உலகிற்கு இசைவான, இச்சையைத் தூண்டும் சாமியார். கடவுள் நம்பிக்கை இல்லாதவராக பேசிக்கொண்டே, இந்துத்துவா’விற்கு இசைவான சமயப் பணிகளை மேற்கொள்பவர். 1999ல், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில்  தியான’லிங்கம்’ அமைத்தவர்;சத்சங்கங்கள் என்ற பெயரில் கூட்ட...

வாட்ஸ் அப்பில் அதிரடி மாற்றம்

Image
#தற்போது ஸ்மார்ட்போன் கையில் இல்லாதவர்களை கண்டுபிடிப்பதே சிரமம். உலகில் 80 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர் என்கின்றன ஆய்வுகள். ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ் அப், லைன், வீ சேட், வைபர், பேஸ்புக் மெசஞ்சர் ஆகியவை, அனைவரையும் அதிலேயே ஆழ்ந்துபோகச் செய்கின்றன. பல்வேறு வசதிகளை வாரி வழங்கும் ஸ்மார்ட்போன்களால் ஆபத்துகளும் அதிகம் என்பதே உண்மை. ஆம், ஸ்மார்ட்போனில் மூழ்கி உயிரை விட்டவர்கள் உலகளவில் அதிகம். அதிலும் குறிப்பாக, வாட்ஸ்ஆப் உபயோகிப்பது பலருக்கும் சாப்பிடுவது, உறங்குவதைப் போல முக்கிய கடமைகளில் ஒன்றாக மாறிவருகிறது. இந்தியாவில் வாட்ஸ்ஆப் சேவைக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது. இதன்படி, தற்போது வாட்ஸ்ஆப் உபயோகிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 20 கோடியாக அதிகரித்துள்ளது. இதனை, வாட்ஸ்ஆப் நிறுவனர்களில் ஒருவரான பிரையான் ஆக்டன் அதிகாரப்பூர்வமாகக் கூறியுள்ளார். டெல்லி ஐஐடி கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோதே, இத்தகவலை பிரையான் வெளியிட்டார். மேலும், தினசரி புதுப்புது அப்டேட் வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலமாக, அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முடிவதாகவும், இந...

ஜிவி பிரகாஷ்-இன் "4 ஜி" பர்ஸ்ட் லுக் வெளியீடு

Image
#இயக்குனர் வெங்கட் பாக்கர் இயக்கத்தில், ஜி.வி பிரகாஷ்குமார், சதிஷ் நடித்திருக்கும் 4ஜி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. திரையுலகில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம்வரும் ஜி.வி பிரகாஷ், வெங்கட் பாக்கர் இயக்கத்தில், 4ஜி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சி.வி குமார் தயாரிக்கிறார். 4 ஜி படம் நான்காம் தலைமுறையின் காதலை சொல்லும் படமாக உருவாகிறது. 4 ஜி படத்தில் மலையாள நடிகை காயத்ரி சுரேஷ் ஜிவிக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையும் அமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜிவி அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 4ஜி திரைப்படம் நகைச்சுவை அதிரடி திரைப்படமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: டிடிவி தினகரன்

Image
         #மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: டிடிவி தினகரன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை “கொலைக் குற்றவாளியான ஜெயலலிதா” என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி ஸ்டாலின் கூறியதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதற்காக ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், 24.2.2017 அன்று(நேற்று) பத்திரிகையாளிர்களிடம் பேசிய போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசும்போது “கொலைக் குற்றவாளியான ஜெயலலிதா” என்ற வார்த்தையை ஸ்டாலின் பயன்படுத்தினார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்காக மு.க.ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தினகரன் வலியுறுத்தியுள்ளார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, வாழப்பாடி பழனிசாமி என்றும், காவேரி மேலாண்மை வாரியத்தை காவேரி நடுவர் மன்றம் என பொது இடங்களில் மு.க.ஸ்டாலின் கூறுவதாக தெரிவித்துள்ள டிடிவி தினகரன் இனியும் துண்டுச் சீட்டு துணையின்றி மு.க.ஸ்டாலின் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்-ஓ.பன்னீர்செல்வம்

Image
சென்னை இன்று தனியார் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:- செயற்கையாக ஒரு அரசியல் சூழல் ஏற்படுத்தபட்டு உள்ளது. கட்சியிலும் ஆட்சியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளது.மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் எண்ணத்திற்கு மாற்றாக ஒரு ஆட்சியிலும் கட்சியிலும் மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளது.  உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கபட்டவுடன் நீதிகேட்கும் பயணம் தொடங்கும். மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தி வருகின்ற தேர்தலில் வெளிப்படும். யாருடைய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் முதல்வர் இயங்குகிறார் என்பது இங்கு அனைவருக்கும் தெரியும்.  சொகுசு விடுதியில் இருந்த போது என்னிடம் பல எம்.எல் ஏக்கள் எனக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்கள். ஆனால் அவர்களை வெளியே விடாமல் அப்படியே அழைத்து வந்து நம்பிகை தீர்மானத்தில் கலந்து கொள்ள வைத்து உள்ளார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் முதலவராக பொறுப்பு ஏற்றவுடன் அமைச்சர்கள் மூலம்,  தலைமை கழக நிர்வாகிகள், பாராளுமன்ற துணை சபாநாயகர் ஆகியோர் மூலம் எனக்கு கடுமையான இடையூறு கொடுத்தார்கள். நானாக பதவி விலக  வேண்டுமென அவர்கள் எண்ணினார்கள். 'ஜல்லிக்கட்டு போ...