பைரவா, சி3 இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சி ரிப்போர்ட்!
அண்மையில் வெளியான சிங்கம் 3 படம் முதல் 6 நாட்களிலேயே ரூ. 100 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு சார்பிலேயே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் வெளியான விஜய்யின் பைரவா படம் கூட 4 நாட்களிலேயே 100 கோடி கிளப்பில் இணைந்ததாக இதேபோல் அறிவிக்கப்பட்டது.
அப்படியானால் இந்த படங்களை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு பெரும் லாபம் கிடைத்திருக்கும் அல்லவா? அவர்களிடமே சென்று விசாரித்தால் நிலைமை தலைகீழாக இருக்கிறது. மேலே சொன்ன இரண்டு படங்களுமே விநியோகஸ்தர்கள் எல்லோருக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறதாம். இதை நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். இதில் பைரவா 25% நஷ்டமும் சி3 50% நஷ்டமும் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments
Post a Comment