ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன்... அரசியல் அமைப்பை துவங்கினார் தீபா

ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன்... அரசியல் அமைப்பை துவங்கினார் தீபா


எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை தொடங்கியுள்ளதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்.

தீபா தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஜெயலலிதா பிறந்தநாளில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை துவங்கியுள்ளோம்.   ஜெயலலிதா பிறந்தநாளில் அமைப்பை துவங்குவதில் பெருமைப்படுகிறேன். இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம். ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக பணியை தொடர்வேன். 
கழகப் பொருளாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். மக்கள் விரும்பியதால் அரசிலுக்கு வந்துள்ளேன். மக்களின் கருத்தை கேட்டு முடிவு எடுப்போம்.
எனக்கு ஆதரவளித்த தொண்டர்கள், மக்களுக்கு நன்றி. என்னை நம்பி வந்தவர்ளை கைவிட மாட்டேன். ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். அவர் விட்டு சென்ற பணிகளை தொடர்வேன். தீபக்கின் நிலை தெளிவற்ற நிலையில் உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்.  தமிழகம் தற்போது துரோகிகளின் பிடியில் உள்ளது " என்றார்.
மேலும், அமைப்பின் கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். 
சில மாதங்களுக்கு முன்னரே விகடனில் சொன்னது போல ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார் தீபா. 

Comments

Popular posts from this blog

Baahubali 2 - The Conclusion Trailer | Prabhas, Rana Daggubati | SS Rajamouli Baahubali Movie